close
Choose your channels

முடிவுக்கு வந்தது லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்.. கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள்..!

Thursday, May 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் படக்குழுவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மாதவனுடன் ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய இரண்டு படங்களில் கடந்த சில மாதங்களாக நடிகை நயன்தாரா நடித்து வந்தார் என்பதும் சமீபத்தில் அவர் ’டியர் ஸ்டூடண்ட்’ என்ற மலையாள படத்தின் நடிக்க ஒப்பந்தமானார் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் நயன்தாரா நடித்து வந்த ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்ததை அடுத்து நயன்தாரா படக்குழுவினர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தை இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் செய்ய படக்குழு என திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டியூட் விக்கி எழுதி, இயக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.