close
Choose your channels

'தவறான தகவல்': 'தளபதி 66' செய்தி குறித்து மனோபாலா டுவிட்!

Thursday, May 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தளபதி 66’ படத்தின் செய்தி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்து வந்த நிலையில் இந்த தகவல் தவறானது என மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகிய இருவருடன் மனோபாலா இருக்கும் புகைப்படத்தை அவரது டுவிட்டரில் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்தப் புகைபடத்தில் சரத்குமார் மற்றும் தேனப்பன் ஆகிய இருவருமே காவல்துறை கெட்டப்பில் இருந்தனர். இதனை அடுத்து ’தளபதி 66’ படத்தில் சரத்குமார் மற்றும் தேனப்பன் ஆகிய இருவரும் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது.

ஏற்கனவே ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பில் தான் சரத்குமார் உள்ளார் என்ற நிலையில் இந்த செய்தி காட்டுத்தீயாய் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் இந்த புகைப்படம் ’தளபதி 66’ படப்ப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்றும் நாங்கள் எதேச்சையாக சந்தித்துக்கொண்ட நிகழ்வு தான் இது என்றும் மனோபாலா விளக்கமளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos