close
Choose your channels

குழந்தை பிறப்பை லைவ் வீடியோவாக வெளியிட்ட 'மாஸ்டர்' பட நடிகை..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தான் குழந்தை பெற்றுக் கொள்வதை லைவ் வீடியோவாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தவர் நடிகை லின்டு ரோனி. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் பணிபுரியும் ரோனி எய்ப்பன் மேத்யூ என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான அவர் கர்ப்பமானதிலிருந்து குழந்தை பெறுவது வரை உள்ள வீடியோவை தொகுத்து எனது யூடியூபில் வெளியிட்டுள்ளார்

அதில் குழந்தை பிரசவம் ஆகும் காட்சியும் லைவாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து தாயும் சேயும் நலமாக இருக்க ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.