close
Choose your channels

கபாலியை முந்திய 'மெர்சல்' முதல் நாள் வசூல்

Thursday, October 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை அள்ளியது. ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் வரியால் டிக்கெட் கட்டணம் உயர்ந்திருந்த போதிலும் முதல் நாள் டிக்கெட்டுக்கள் முன்பதிவு ஒருசில நிமிடங்களில் முடிந்தது

இந்த நிலையில் இந்த படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.23 கோடி வசூல் செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' ரூ.20 கோடி வசூல் செய்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்த படம் சென்னையில் ரூ.1.52 கோடியும், செங்கல்பட்டில் ரூ.6 கோடியும், கோவையில் ரூ.3.75 கோடியும், தென்னாற்காடு பகுதியில் ரூ.3.2 கோடியும் வசூல் செய்துள்ளது. அதேபோல் கேரளாவில் ரூ.6.1 கோடியும், கர்நாடகாவில் சுமார் ரூ.4 கோடியும் வட இந்தியாவில் ரூ.1.35 கோடியும் வசூல் செய்துள்ளது. 

மேலும் உலகம் முழுவதும் இந்த படம் முதல் நாளில் ரூ.45 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கபாலி'யை அடுத்து உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'மெர்சல்' பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.