close
Choose your channels

தளபதி' விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'தளபதி'யின் சகோதரர்

Saturday, June 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதியாக இருந்த விஜய், 'மெர்சல்' படத்தில் தளபதி என்ற கேரக்டரில் நடித்த பின்னர் அவரை அவரது ரசிகர்கள் தளபதி என்றே அழைத்து வருகின்றனர். அவர் நடித்து வரும் படங்களையும் 'தளபதி' அடைமொழி சேர்ந்தே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடந்த பல ஆண்டுகளாக அவரது கட்சி தொண்டர்கள் 'தளபதி' என்றே அழைப்பதுண்டு. அந்த வகையில் இன்று 'தளபதி' விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 'தளபதி' ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி தனது சமூக வலைத்தளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 'பிகில்' படம் வெற்றி அடையவும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மு.க.அழகிரியின் மகனும் தயாரிப்பாளருமான தயாநிதி அழகிரி, 'நேற்று பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானவுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.