close
Choose your channels

தொலைந்த கணவரை கண்டுபிடிக்கும் நடிகை நந்திதா!

Tuesday, May 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நந்திதா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவுள்ளது. பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி 2' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நந்திதா நடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதேபோல் நந்திதா முக்கிய வேடத்தில் நடித்துள்ள '7' என்ற திரைப்படம் அடுத்த வாரம் அதாவது ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் '7' படத்தில் நந்திதா நடித்துள்ள கேரக்டர் மற்றும் இந்த படத்தின் ஒன்லைன் கதை குறித்த தகவல் சற்றுமுன் வெளியான போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'7' படத்தில் நந்திதா ரம்யா என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும் ஒரு மழை இரவில் ரம்யா தனது கணவர் கார்த்திக்கை காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருப்பதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் கதை நந்திதா தனது தொலைந்த கணவரை தேடி கண்டுபிடிப்பதுதான் என்று தெரிகிறது.

ரகுமான், ரெஜினா, நந்திதா, அனிஷா அம்ப்ரோஸ் உள்பட் பலர் நடித்துள்ள இந்த படத்தை நிசார் ஷபி இயக்கியுள்ளார். ஸ்ரீக்ரீன் புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.