close
Choose your channels

பட்டுக்குட்டி பிறந்துட்டா.. மகள் பிறந்ததை மகிழ்ச்சியாக அறிவித்த சின்னத்திரை நட்சத்திர ஜோடி..!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரை நட்சத்திர ஜோடி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

சன் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணி என்பவர் தொலைக்காட்சி சீரியல் நடிகர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் சமீபத்தில் கண்மணி கர்ப்பம் ஆனபோது அவரது வளைகாப்பு புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

நியூஸ் ரீடர் கண்மணி மற்றும் ’இதயத்தை திருடாதே’ சீரியல் மூலம் பிரபலமான நவீன் ஆகிய இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்ட நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு மகள் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ள நவீன் குழந்தையின் கையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.