close
Choose your channels

நவீன் இயக்கும் அடுத்த பட டைட்டில் 'அக்னி நட்சத்திரம் 2.0'?

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூடர் கூடம்' பட இயக்குனர் நவீன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் நடிக்கவுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் நவீனின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக்கை உலக நாயகன் கமல்ஹாசன் அறிவிக்கவுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நவீன் வெளியிட்டுள்ள ஒரு ஸ்டில்லில் ஒருபக்கம் அக்னி நட்சத்திரம் கார்த்தி, பிரபு படமும் இன்னொரு பக்கம் 2.0 பட ஸ்டில் மாதிரியும் இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் 'அக்னி நட்சத்திரம் 2.0' என இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக மேலும் சில டைட்டில்களை டுவிட்டர் பயனாளிகள் யூகம் செய்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு , ஷாலினி  ரெட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.