close
Choose your channels

'நேர் கொண்ட பார்வை' படத்தின் புதிய அப்டேட் தந்த போனிகபூர்

Saturday, July 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து முடித்துள்ள நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாலும், நீண்ட விடுமுறை நேரத்தில் இந்த படம் வெளிவரவிருப்பதாலும் நல்ல ஒப்பனிங் வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நேர் கொண்ட பார்வை' படத்தின் அப்டேட்டுக்கள், புரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், 'இந்த படத்தின் தீமுகம் தான்' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் டிரண்டாக்கி உள்ளனர்.

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.