close
Choose your channels

சாரி கேட்ட நிக்சன்.. சாரியெல்லாம் செல்லாது என முகத்தில் அடித்தது போல் சொன்ன வினுஷா..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வினுஷா குறித்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இன்றைய அடுத்த புரோமாவில் வினுஷாவிடம் அவர் சாரி கேட்டார். ஆனால் அந்த சாரி எல்லாம் செல்லாது என வினுஷா முகத்தில் அடித்தது போல் நிக்சனிடம் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நிக்சன் மற்றும் ஐஷூ ஆகிய இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது வினுஷா குறித்தும் அவரது அங்கங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் நிக்சன் சில வர்ணனை செய்தார். இதனை பிக் பாஸ் பொதுவெளியில் வெளிப்படுத்திய நிலையில் நிக்சனுக்கு பெரும் தர்ம சங்கடம் ஆகியது.

அவரை பெண் போட்டியாளர்கள் கடுமையாக விமர்சனம் நிலையில் தான் அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை என்றும் ஒரு காமெடிக்காக தான் சொன்னேன் என்றும் நிக்சன் சமாளித்தார். ஒரு கட்டத்தில் இது பெரிய பிரச்சனையாக, மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், வெளியே போய் வினுஷா காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்டுக்கொள்ள தயார் என்றும் கமல்ஹாசன் முன்னிலையில் கூட அவர் கூறினார்.

இந்த நிலையில் தற்போது எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் வினுஷாவை நேரில் சந்தித்த நிக்சன் அவரிடம் சாரி கேட்டார். அப்போது அவர் கூறியபோது ‘ஐஷுவிடம் விட நான் பேசிய மேட்டர் அப்போது எனக்கு தப்பு என்று தோன்றவில்லை, அதை வைத்து உள்ளே என்னை ஒண்ணு பண்ணினாங்க, வெளியே அதைவிட அதிகமாக பண்ணினார்கள். இதனால் நேரடியாக உங்களிடம் சார் கேட்க வேண்டும், சாரி என்று கூறினார்.

அதற்கு வினுஷா ’நீ பேசுனது தப்பு என்று உனக்கே தெரிந்துவிட்டது. உனக்கே தெரியுது நீ எதை சொன்னாய் என்று, ஆனால் அந்த இடத்தில் வந்து சரியாக வருத்தம் தெரிவிக்காததால் அது வெளியில் தப்பா போய்விட்டது.

இந்த விஷயம் வெளியே தப்பா போய்விட்டது, என்னை வருத்தப்படுத்தியது என்பதற்காக நீ சாரி சொன்னால், அந்த சாரி செல்லாது’ என்று கூற அதற்கு நிக்சன் திரும்ப திரும்ப என்னை நீங்க ரிஜிஸ்டர் பண்றதுபோல் இருக்குது’ என்று கூறுவதுடன் இன்றைய வீடியோ முடிகிறது. இருப்பினும் இன்றைய 24 மணி நேர நிகழ்ச்சியில் அல்லது இன்றைய எபிசோடில் இதன் முழு உரையாடல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.