close
Choose your channels

பட புரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் செய்த நல்ல காரியம்… ரசிகர்கள் வாழ்த்து!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சித்தார்த். ஷங்கர் இயக்கிய “பாய்ஸ்“ திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்திவந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் 8 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தெலுங்கில் நேரடியாக உருவாகியிருக்கும் “மஹா சமுத்திரம்“ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அஜய் பூபதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சர்வானந்த்துடன் இணைந்து நடிகர் சித்தார்த் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனு இம்மானுவேல், அதிதிராவ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் “மஹா சமுத்திரம்“ திரைப்படம் நாளை வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் இணைந்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வண்ணம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை நடிகர் சித்தார்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“மஹா சமுத்திரம்“ படக்குழுவினர் மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் சித்தார்த்துக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துவரும் “இந்தியன்2“ திரைப்படத்தில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர “சைத்தான் கா பச்சா“ மற்றும் “டக்கர்“ போன்ற திரைப்படங்களிலும் இணைந்து நடித்து வருகிறார் .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.