close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' நடிகருக்கு பிறந்த ஆண் குழந்தை: குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

Monday, April 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் அஸ்வின். இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’நடுநிசி நாய்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் அஜித்தின் ’மங்காத்தா’ சூர்யாவின் ’ஏழாம் அறிவு’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் சேந்தன் அமுதன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஸ்வினுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இரண்டாவது ஆக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏப்ரல் இரண்டாம் தேதி தனக்கு குழந்தை பிறந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஸ்வின் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.