close
Choose your channels

டெல்லி சாலையோர கடையில் குல்பி சாப்பிட்ட 'பொன்னியின் செல்வன்' டீம்.. க்யூட் புகைப்படங்கள்..!

Thursday, April 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் நாடு முழுவதும் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகின்றனர் என்பதும் சமீபத்தில் அவர்கள் டெல்லி சென்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் டெல்லியில் உள்ள சாலையோர கடைகளில் ’பொன்னின் செல்வன்’ குழுவினர் குளுகுளு குல்பி சாப்பிட்ட க்யூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தலைநகர் டெல்லியில் ’பொன்னியின் செல்வன்’ படத்தை புரமோஷன் செய்ய சமீபத்தில் இந்த படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் சென்று இருந்தனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகின என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள சாலையோர கடையில் ’பொன்னின் செல்வன்’ படக்குழுவினர் குளுகுளு குல்பி சாப்பிட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கார்த்தி மற்றும் சோபிதா துலிபாலா குல்பியையே கத்தி போல் வைத்து சண்டை போட்டவாறு கொடுத்த போஸ் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை, கோவை, டெல்லியை அடுத்து வேறு சில நகரங்களுக்கும் ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் புரோமோஷன் செய்ய உள்ளனர் என்பதும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.