close
Choose your channels

வெங்கட்பிரபுவின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, November 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை 28, மங்காத்தா உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவர் தயாரிக்கும் படமான 'RK .நகர்' படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் 'RK .நகர்' படத்தின்  டீசர் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 7ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளரும், வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி தனது சமூகவலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த 'வடகறி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும்,  விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம் டிசைனும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.