close
Choose your channels

வியாபாரத்தில் ஒன்றிணைந்தது ரஜினி-விஜய் படங்கள்

Thursday, January 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' திரைப்படம் மற்றும் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தெறி' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களையும் பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களும் வியாபாரத்தில் ஒன்றிணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களின் மலேசிய ரிலீஸ் உரிமையை பேக்கேஜ் ஆக மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நெருங்கி வரும் விஜய் ஆகிய இருவரின் படங்களுக்கும் மலேசியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களும் மலேசியாவில் மிகப்பெரிய வசூலை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.