close
Choose your channels

ரஜினி முதல்வர், ஐஸ்வர்யாராய் மகள் பிரதமர்: பிரபல ஜோதிடர் கணிப்பு

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் என்பவர் ஏற்கனவே கணித்து கூறியவை துல்லியமாக நடந்துள்ள நிலையில் சமீபத்திய அவரது கணிப்பான தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது

சிரஞ்சிவி, ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னரே கணித்த கியானேஷ்வர், தமிழக முதல்வராக ரஜினிகாந்த் வருவார் என்றும், ரஜினி ஆரம்பிக்கும் கட்சி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சியை பிடிக்கும் என்றும் கணித்துள்ளார்.

அதேபோல் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக நீடிப்பார் என்றும், அதேபோல் உலக அழகி ஐஸ்வர்யாவின் மகள் ஆரத்யா, தன்னுடைய பெயரை ரோகிணி என்று மாற்றிக்கொண்டால் அவருக்கு பிரதமர் ஆகும் யோகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே வரும் 2024ஆம் ஆண்டு போர் நடைபெறும் என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக நீடிப்பார் என்றும் ஜோதிடர் கியானேஷ்வர் கணித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.