close
Choose your channels

சரியாகிடும் தம்பி, எல்லாம் சரியாகிடும்: நிரூப்புக்கு பல்பு கொடுத்த ராஜூ!

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜு மற்றும் பிரியங்கா மீது நிரூப் குற்றம் சுமத்திய போது, ‘சரியாகிவிடும் தம்பி எல்லாம் சரியாகிவிடும்’ என கேலியாக ராஜூ பதில் சொன்ன காட்சி இன்றைய புரமோவில் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கின் அடுத்த கட்டமாக சக போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டுமென்று பிக்பாஸ் அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில் நிரூப்பின் கேள்வி பிரியங்கா மற்றும் ராஜூ மீது உள்ளது. அண்ணாச்சி இருக்கும்போது பிரியங்கா இந்த கேம் ஷோ கலக்கப்போவது யாரு கிடையாது என்று கூறினார். ஆனால் கடந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் முடிந்த பிறகு ராஜுவுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பிரியங்கா எக்ஸ்ட்ராவாக கேர் எடுத்துக் கொள்வது அவர்களுடைய குடும்பத்தினர் சொல்லிவிட்டு போனதால் தானோ என்று நினைக்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதில் கூறிய ராஜு ’சரியாகிடும் தம்பி, எல்லாம் சரியாகிடும்’ என்று கேலியாக கூற அதைக் கேட்டு பிரியங்கா சிரிப்பது போன்ற காட்சியுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.