close
Choose your channels

உன்னை விட்டு எப்படி விலக முடியும்.. அன்பின் அடையாளமே நீதானே. 'சாகுந்தலம்' டிரைலர்..

Wednesday, April 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் 5 மொழிகளில் டிரைலர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் கதையில் உள்ள கிளை கதைகளில் ஒன்றுதான் சாகுந்தலம் என்பதும் சகுந்தலையின் காதல் கதை தான் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சகுந்தலை கேரக்டரில் சமந்தா நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குணசேகர் இயக்கத்தில் மணிசர்மா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தா, தேவ் மோகன், கபீர் பேடி, கௌதமி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகவும் பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட செட்களில் இந்த படம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.