close
Choose your channels

அஜித், சூர்யா பட நாயகிக்கு பெண் குழந்தை!

Friday, July 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'அசல்', சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு அக்சய் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் சமீரா மீண்டும் கர்ப்பமடைந்தார்.

கர்ப்ப நிலையிலும் நீச்சலுடை உள்பட கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் சமீரா ரெட்டி பதிவு செய்து வந்த நிலையில் இன்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சமீராரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் குழந்தையின் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

எங்கள் வீட்டின் தேவதை இன்று காலை வருகை தந்துள்ளார். எனக்கு வாழ்த்து தெரிவித்த, ஆசி வழங்கிய அனைவருக்கும் நன்றி என சமீரா ரெட்டி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.