close
Choose your channels

அப்பாங்க எல்லாம் அப்படித்தான்.. புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' டீசர்..!

Sunday, April 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமுத்திரகனி நடித்த ’ராமன் ராகவம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அப்பா மகனுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் பாசப்பிணைப்பு கதையம்சம் கொண்ட இந்த படம் சென்டிமென்ட் ஆக பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் உள்ள காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது.

ஒரு அப்பா தன் மகனை புரிந்து கொள்ளாமல் அவன் உருப்பட மாட்டான், வாழ்க்கையில் உயர மாட்டான் என்று திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அதன் பிறகு அந்த மகன் தனது அப்பாவுக்கு தன்னுடைய நிலையை புரிய வைத்தாரா? என்பதை அப்பா மகன் சென்டிமென்ட் காட்சிகளுடன் கூடிய திரைப்படம் தான் ‘ராமம் ராகவன்’.

அப்பா கேரக்டரில் சமுத்திரக்கனி, மகன் கேரக்டரில் தன்ராஜ் நடித்திருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், சத்தியா, ஸ்ரீனிவாச ரெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். நாயகன் தன்ராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அருண் இசை அமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.