close
Choose your channels

பிரதமரை பாதுகாக்கும் பணியில் சமுத்திரக்கனி

Thursday, January 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் பிரதமராக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார் என்பதும் அவரை பாதுகாக்கும் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்து வருவதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிரதமர் கேரக்டரில் நடித்து வரும் மோகன்லாலை பாதுகாக்கும் மற்றொரு பாதுகாப்பு அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யாவுக்குக் இணையாகவும், படம் முழுவதும் வரும் முக்கிய கேரக்டராகவும் இவரது கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளது. மேலும் மோகன்லாலுடன் சமுத்திரக்கனி இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாக் இவருகிறது.

சூர்யா, சாயிஷா, மோகன்லா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.