close
Choose your channels

பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு இந்த கேரக்டரா? டிவி சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

Saturday, April 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ஆரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து 56வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலா உள்பட சக போட்டியாளர்கள் உடன் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் சம்யுக்தா, டிவி சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

விஜய் சேதுபதி நடித்த ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சம்யுக்தா, தற்போது கலர்ஸ் டிவியில் ஒரு புதிய தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சீரியலில் அவர் அம்மன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

சம்யுக்தா, தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் இவர் அம்மன் கேரக்டரில் நடிப்பதா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அம்மன் கேரக்டருக்கு அவர் மிகப்பொருத்தமாக இருப்பார் என்றும் அவரது முகம் அம்மன் கேரக்டருக்கு சரியாக இருக்கும் என்றும் ஒருசில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.