close
Choose your channels

இன்று 'லியோ' பிரபலத்தின் பிறந்தநாள்.. மாஸ் வீடியோ வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்..!

Saturday, July 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் பிறந்த நாளை அடுத்து அவரது கேரக்டருடன் கூடிய வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லனாக நடித்திருக்கும் சஞ்சய் தத் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவருடைய கேரக்டரை மையமாக கொண்டு ‘லியோ’ படத்தின் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சஞ்சய்தத் இந்த படத்தில் அந்தோணி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்தில் சஞ்சய் தத் நடித்து உள்ளார் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. இந்த வீடியோ ‘லியோ’ ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த்,மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.