close
Choose your channels

சந்தானம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

Friday, October 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் நம்பர் 1 காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் ஆகி, தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.
சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு' ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவருடைய அடுத்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. விடிவி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சேதுராமன் இயக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது. இந்த தகவலை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.