close
Choose your channels

இரண்டு சீனியர் நடிகர்களுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

Tuesday, March 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் இரண்டையுமே வெற்றிகரமாக கொண்டு சென்று அனைவரையும் அசத்தி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பென்சில்' விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் தற்போது 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', புரூஸ்லி', கடவுள் இருக்குறான் குமாரு ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் பிரபல இயக்குனர் பாண்டியராஜ் இயக்கவுள்ள 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்ற நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு சீனியர் நடிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகிய இருவரும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா 2' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.