close
Choose your channels

'செம போத ஆகாதே': மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

Sunday, May 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய 'செம போத ஆகாதே' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்றது. பின்னர் திடீரென இந்த படம் இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டது. அதாவது மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இதனை உறுதி செய்வதை போல் ரிலீஸ் தேதியுடனான புதிய போஸ்டரும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதி தள்ளிவைப்புக்கு அதர்வா தரப்பில் இருந்த எந்த விளக்கமும் இன்னும் அளிக்கப்படவில்லை

அதவார் தயாரித்து நடித்துள்ள இந்த படத்தில் மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இவர்தான் அதர்வா அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.