close
Choose your channels

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தொடரில் இருந்து விலகிய நடிகர்.. இவருக்கு பதில் இவர் யார்?

Tuesday, April 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில் இதில் குக்காக கலந்து கொண்ட சீரியல் நடிகர் ஒருவர் ஜீ தமிழ் சேனலில் நடித்துக் கொண்டிருந்த தொடரிலிருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி சனிக்கிழமை ஆரம்பித்தது என்பதும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் எபிசோடுகள் சிறப்பான முறையில் இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 10 குக்குகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் ஒருவர் தான் அக்சய் கமல் என்றும் அவர் முதல் நாளே சிறப்பாக செயல்படுகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’இந்திரா’ என்ற தொடரில் நாயகனாக அக்சய் கமல் நடித்துக் கொண்டிருந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காகவே அந்த தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்திரா’ தொடரின் நாயகன் கேரக்டருக்காக வேறொரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகர் ஒருவரை ஜீ தமிழ் சேனல் தேர்வு செய்திருப்பதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதே போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சண்டக்கோழி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நியாஸ் கான் அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் அவருக்கு பதில்’ பூவே பூச்சூடவா’ தொடரில் நடித்துக் கொண்டிருந்த மதன் என்பவர், நியாஸ் கான் நடித்த விக்ரம் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.