close
Choose your channels

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாவாரா தல-தளபதி நாயகி?

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கேற்ப திரையுலகில் நுழைந்த ஒருசில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாகிவிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன். விஜய்யுடன் 'புலி' மற்றும் அஜீத்துடன் 'தல 56' என தல-தளபதிகளுடன் நடித்துவிட்ட ஸ்ருதிஹாசன் அடுத்ததாக 'சிங்கம் 3' படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க முயற்சி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஷாமிலி அல்லது சமந்தா நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஸ்ருதிஹாசனை படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஸ்ருதிஹாசன் தற்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இதுகுறித்து இன்னும் இரண்டு நாட்களில் அவரது முடிவு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.