close
Choose your channels

சிம்புவின் 'AAA' படத்தில் டி.ஆர் கனெக்ஷன்

Saturday, August 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் கடந்த 1980ஆம் ஆண்டுகளில் ஹிட்டான டி.ஆரின் பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பயன்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து இயக்குனர் ஆதிக் விளக்கம் அளித்துள்ளார். இந்த படத்தின் டி.ஆரின் பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருடைய புகழ்பெற்ற பாடல்களின் வடிவத்தில் புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஒருபாடலை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் மீதி பாடல்களின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் சென்னை அருகேயுள்ள தனியார் தீம்பார்க்கில் நடைபெறவுள்ளதாகவும் ஆதிக் மேலும் தெரிவித்துள்ளார்.
சிம்பு, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் அவர்களின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் மற்றும் படத்தொகுப்பாளராக ரூபன் பணியாற்றி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.