close
Choose your channels

சொர்க்கத்தில் இருக்கும் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா.. நெகிழ்ச்சியான பதிவு!

Sunday, December 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகி சித்ரா, சொர்க்கத்தில் இருக்கும் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு செய்த இன்ஸ்டகிரம் போஸ்ட் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் உள்பட பல மொழிகளில் பின்னணி பாடல்கள் பாடி தேசிய விருது உள்பட பல விருதுகளை பெற்றவர் சித்ரா. இவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது என்றும் நந்தனா என்ற அந்த பெண் குழந்தை கடந்த 2011ம் ஆண்டு துபாய்க்கு இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் கடும் சோகத்தில் இருந்த சித்ரா மீண்டு வர பல மாதங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சித்ராவின் மகள் நந்தனா நினைவு தினத்தை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்த நாள் கொண்டாடும் உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் அன்பு செலுத்தும் உனக்கு வயது அதிகம் ஆகாது. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.