close
Choose your channels

'இருமுகன்' ஆடியோ விழாவில் 3 மாநில பிரபலங்கள்

Saturday, July 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி என வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த ஆடியோ விழாவில் மூன்று மாநில பிரபலங்கள் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர்கள் சிவகார்த்திகேயன், நிவின்பாலி மற்றும் ராம்சரண் என்பது குறிப்பிடத்தக்கது,.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரைத்துறைகளில் பிரபலமாக இருக்கும் இம்மூவரும் இந்த விழாவில் கலந்து கொள்வது ஆடியோ விழாவை மேலும் பிரமாண்டமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தில் நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தி ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.