close
Choose your channels

ஆவலுடன் எதிர்பார்த்த 'ரெமோ' ஆடியோ ரிலீஸ் தேதி

Thursday, August 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதலைமுறை நடிகர்களில் தொடர்ந்து வெற்றியை கொடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள சிவகார்த்திகேயன், தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். நர்ஸ் என்ற பெண் வேடம் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் 'செஞ்சிட்டாளே' பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் மற்ற பாடல்களையும் ரசிக்க இன்னும் பத்து நாட்கள் மட்டுமே காத்திருந்தால் போதும்.
அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.