close
Choose your channels

அஜித் இயக்குனர், ரஜினி-விஜய் தயாரிப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன்

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு விஞ்ஞான படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களை அடுத்து சிவகார்த்திகேயன், இயக்குனர் சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் சிவா தற்போது அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தை இயக்கி வருகிறார் என்பதும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ரஜினி நடித்து வரும் 'பேட்ட' மற்றும் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படங்களை தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.