close
Choose your channels

இன்று மாலை 'ரெமோ' தரும் சர்ப்ரைஸ்

Saturday, July 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் மேக்கப் கலைஞர்களின் கைவண்ணத்தில் சிவகார்த்திகேயனின் நர்ஸ் கெட்டப் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தபோது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்திற்காக அனிருத் இசையமைத்த 'செஞ்சிட்டாளே' சிங்கிள் நேற்று ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை மேலும் ஒரு சர்ப்ரைஸாக 'ரெமோ' படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆர்.டி.ராஜா தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், ஸ்ரீதிவ்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வரும் இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.