close
Choose your channels

மீண்டும் காஷ்மீர் செல்லும் 'எஸ்கே 21' படக்குழு.. இந்திய ராணுவம் செய்த உதவி..!

Tuesday, September 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. சுமார் 75 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் குறிப்பாக இந்திய ராணுவத்தின் உதவியுடன் ஒரு அட்டகாசமான போர் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் நடைபெற உள்ளதாகவும் இதில் சாய்பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்கு மீண்டும் ’எஸ்கே 21’ படக்குழுவினர் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் அங்கு மேலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. ’மாவீரன்’ பெற்ற வெற்றி காரணமாக சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.