close
Choose your channels

மீண்டும் வருகிறது ரஜினி ரசிகர்கள் மிஸ் செய்த பாடல்

Wednesday, June 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக இருக்கும். ஒன்று ரஜினியின் மாஸ் அறிமுக காட்சி. இன்னொன்று ரஜினியின் அறிமுக பாடல். முத்து, அண்ணாமலை, பாட்ஷா, முதல் பல படங்களில் ரஜினியின் அறிமுகப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை அவரது ரசிகர்களால் பெற்றது.

ஆனால் 'எந்திரன்', 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களில் ரஜினிக்கு மாஸ் அறிமுகமும் இல்லை, பிரமாண்டமான அறிமுக பாடலும் இல்லை. இது ரஜினி ரசிகர்களை அதிருப்தி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், தற்போது சூப்பர் ஸ்டாரை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினி ரசிகர்கள் மிஸ் செய்த அறிமுக பாடலை பிரமாண்டமாக உருவாக்கவிருப்பதாகவும், அதேபோல் ரஜினியின் அறிமுக பாடலை எஸ்பிபி பாடவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த சில வருடங்களாக ரஜினி ரசிகர்கள் மிஸ் செய்த மாஸ் அறிமுக பாடலை மீண்டும் திரையில் அவரது ரசிகர்கள் பார்க்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.