close
Choose your channels

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீசாந்த்… அதுவும் முக்கியப் திரைப்படத்திலா?

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

“நானும் ரௌடிதான்“ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத், விக்னேஷ் சிவன் கூட்டணியில் “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்பை கொண்டிருக்கும் நிலையில் இந்தப் படத்தில் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீசாந்தும் இணைந்து நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரளாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐபிஎல் போட்டிகளில் முன்னணி வீரராக விளையாடி வந்தார். இவர் சூதாட்டச் சர்ச்சையில் சிக்கியதால் பிசிசிஐ இவருக்குத் தடை விதித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தோடு இந்தத் தடை நீங்கிய நிலையில் வழக்குத் தொடுத்து அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது மீண்டும் ஐபிஎல்-இல் இடம்பெற அவர் முயற்சித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து இந்தி மற்றும் ஒருசில மலையாள திரைப்படங்களில் நடித்துவந்த ஸ்ரீசாந்த் தற்போது முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இதுவரை இந்தத் தகவலை வெளியிடாத படக்குழு அவருடைய பிறந்தநாளை ஒட்டி “முகமது மொபி“ எனும் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.