close
Choose your channels

சிம்புவை மாலை, மரியாதையுடன் வரவேற்ற ஹன்சிகா படக்குழு!

Sunday, May 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமான 'மஹா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மதரீதியிலான சர்ச்சையை ஏற்படுத்தியதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதன்படி நேற்று சிம்பு சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த சிம்புவை, 'மஹா' படக்குழுவினர் மாலையணிவித்து மரியாதையுடன் வரவேற்றனர்.

ஹன்சிகா, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், நாசர், ஜெயப்பிரகாஷ், சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஜமீல் என்பவர் இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையில் மதி ஒளிப்பதிவில் சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.