close
Choose your channels

'மை டியர் குட்டிச்சாத்தான்' பாணியில் 'ஸ்ட்ராபெர்ரி 2': பா.விஜய்

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான "ஸ்ட்ராபெர்ரி' திரைப்படம் ஊடகங்களினால் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும், நாயகனுமாகிய பா.விஜய் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நான் கதாநாயகன் என்பது பெயரளவிற்குத்தான் என்றும், உண்மையில் இந்த படத்தின் நாயகன் சமுத்திரக்கனிதான் என்று கூறிய பா.விஜய், ரோபோ சங்கரின் கேரக்டரும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.

இந்த படம் மற்ற பேய்ப்படங்கள் போல பயமுறுத்துவதற்காகவும், காமெடிக்காகவும் தயாரிக்கவில்லை என்றும் ஒரு நல்ல மெசேஜ் மக்களிடம் போய் சேரவேண்டும் என்பதற்காகவே இயக்கியுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பா.விஜய் கூறினார்.

மேலும் இந்த படத்தின் வெற்றியை அடுத்து, ஸ்ட்ராபெர்ரி 2' படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய பா.விஜய், "ஸ்ட்ராபெர்ரி 2' திரைப்படம், முதல் பாகம் போல் பேய்க்கதையாக இருக்காது என்றும் இந்த படம் முழுக்க முழுக்க 'மை டியர் குட்டிச்சாத்தான்' பாணியில் மந்திரம், மாயாஜாலம் போன்ற குழந்தைகளை கவரும் அம்சங்கள் அதிகம் இருக்கும் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.