close
Choose your channels

ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Monday, November 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்த சூர்யாவின் 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சூர்யாவின் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தையும் தற்போது தயாரித்து வருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு புதிய பட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'ஹரிஹர மகாதேவகி' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக் மற்றும் நிக்கி கல்ராணி இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
கவுதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி முதல்முதலாக ஜோடி சேரும் இந்த படத்தை சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலு இசையமைக்கவும் செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.