close
Choose your channels

சிம்பு கேரியரில் இதுதான் பெஸ்ட்.. 'பத்து தல' தயாரிப்பாளரின் அறிக்கை..!

Friday, April 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவான ‘பத்து தல’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிம்புவின் கேரியரில் இந்த படம் தான் அதிக வசூலை பெற்ற படம் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்களின்‌ 'பத்து தல' திரைப்படம்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 300-க்கும்‌ மேற்பட்ட திரையரங்குகளிலும்‌, உலகம்‌ முழுவதும்‌ 500 திரையரங்குகளிலும்‌ இன்று இரண்டாவது வாரத்தில்‌ நுழைந்துள்ளது. எங்களின்‌ படத்திற்கு ரசிகர்களிடம்‌ இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்‌ தருகிறது. அதற்காக, சிலம்பரசன்‌ ரசிகர்கள்‌ மற்றும்‌ பார்வையாளர்களுக்கு முழு மனதுடன்‌ எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம்‌. படம்‌ குறித்து பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள்‌ மற்றும்‌ ஊடகங்களின்‌ ஆதரவிற்கும்‌ நன்றி தெரிவிக்க விரும்புஒறோம்‌.

"பத்து தல' திரைப்படம்‌ சிலம்பரசனின்‌ கரியரில்‌ அதிக வருவாயை ஈட்டிய ஒரு படமாக மட்டுமல்லாமல்‌, எங்களின்‌ தயாரிப்பு நிறுவனத்திற்கும்‌ பெரும்‌ லாபம்‌ தந்‌திருக்கக்கூடிய படமாகவும்‌ அமைந்ததுள்ளது.

சிலம்பரசன்‌ இந்தப்‌ படத்தின்‌ ஒரு முக்கியமாக அங்கமாக இருந்து, அவரது சிறப்பான ஆதரவைக்‌ கொடுத்து உதவியுள்ளார்‌. குறிப்பாக இசை வெளியீட்டு விழா மற்றும்‌ பிற புரோமோஷன்களின்‌ போது கலந்து கொண்டு படத்திற்கு ஒரு பெரிய கவன ஈர்ப்பைக்‌ கொண்டு வந்து படம்‌ பல வழிகளில்‌ வெற்றிபெற உதவியதற்காக அவருக்கு எங்களது நன்றியை தெரிவிக்க விரும்புஒறோம்‌.


ஏ.ஆர்‌. ரஹ்மானுக்கு எங்களது சிறப்பு நன்றி. ரஹ்மான்‌ சார்‌ தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில்‌ எங்கள்‌ படத்திற்கு எல்லா வகையிலும்‌ ஆதரவு அளித்து, பல வாரங்களாக முதலிடத்தில்‌ இருக்கும்‌ பாடல்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல்‌ சரியான நேரத்தில்‌ அருமையான பின்னணி இசை, இசை வெளியீட்டு விழாவில்‌ கலந்து கொண்டது மற்றும்‌ பிற புரோமோஷன்களில்‌ ஒரு பகுதியாக இருந்தது படத்திற்கு பெரிதும்‌ உதவியது.

திரைப்படத்தின்‌ இந்த மூன்று வருட பயணத்தில்‌ தனது உற்சாகத்தைத்‌ தக்கவைத்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும்‌ கவரும்‌ வகையில்‌, தரமான கமர்ஷியல்‌ எண்டர்டெய்னரை கொடுத்த இயக்குநர்‌ என்‌. கிருஷ்ணா அவர்களுக்கு எங்கள்‌ மனமார்ந்த நன்றிகள்‌. படத்தின்‌ பல்வேறு உரிமைகளை திறந்த விலையில்‌ விற்க, படத்தின்‌ மீதான அவரது ஈடுபாடும்‌, அர்ப்பணிப்பும்‌ இந்தப்‌ படம்‌ சுமுகமாக முடிந்து வெளிவருவதற்கு முதன்மைக்‌ காரணம்‌.

எல்லா வகையிலும்‌ படத்திற்கு முழு ஆதரவை வழங்கிய அன்பான கெளதம்‌ கார்த்திக்‌ அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. படத்தின்‌ வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய மற்ற கலைஞர்கள்‌ பிரியா பவானி சங்கர்‌, கெளதம்‌ வாசுதேவ்‌ மேனன்‌, கலையரசன்‌, சந்தோஷ்‌ பிரதாப்‌, டீஜே அருணாச்சலம்‌, அனு சித்தாரா, மது குருசுவாமி, ரெடின்‌ கிங்ஸ்லி, கவிஞர்‌ மனுஷ்யபுத்திரன்‌, சென்றாயன்‌,செளந்தரராஜா மற்றும்‌ பிறருக்கும்‌ எங்கள்‌ நன்றிகள்‌.

நடன சென்சேஷன்‌' சாயிஷா சைகல்‌ தனது நடனத்தால்‌ மிகப்பெரிய வெற்றியை 'ராவடி...' பாடலின்‌ மூலம்‌ பெற்றுத்‌ தந்துள்ளார்‌. கடைசி நேரத்தில்‌ நடனத்‌தில்‌ தனது சிறப்பான பங்களிப்பைக்‌ கொடுத்ததற்காக அவருக்கும்‌ எங்களது ஸ்பெஷல்‌ நன்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.