close
Choose your channels

அஜித், சூர்யா, சிம்புவுக்கு படம் பண்ணுவது உண்மையா? சுதா கொங்காரா பேட்டி

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூரரைப்போற்று இயக்குநர் சுதா கொங்கரா கேஜிஎப் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் நாயகன் யார் என்பது இன்னும் முடிவு செய்யாத நிலையில் சுதா கொங்காராவின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க போவதாகவும், அஜித் நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்த சுதா கொங்கரா, ‘சிம்புவுக்கு நான் கதை சொன்னதாகவும், அஜித்துக்கு நான் கதை சொன்னதாகவும் வெளியான தகவலை நானே படித்து ஆச்சரியப்பட்டேன். இது எதுவுமே உண்மை இல்லை. ஆனால் அதே நேரத்தில் சூர்யாவுடன் இணைந்து இன்னொரு படத்தை இயக்க இருப்பது உண்மைதான். அந்த படம் என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ஆன கதை அம்சம் என்றும் ஆனால் அந்த படம் ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படம் இல்லை என்றும் அவர் கூறினார். எனவே அஜித் மற்றும் சிம்பு படத்தை சுதா கொங்கரா இயக்கப்போவதாக வெளிவந்த அனைத்து செய்திகளும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இந்த பேட்டியில் ’சூரரைப்போற்று’ இந்தி படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் படம் ரிலீசாகும் என்றும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.