close
Choose your channels

சுந்தர் சியின் 'முத்தின கத்தரிக்கா' ரிலீஸ் தேதி

Friday, June 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி நடிப்பில் அவருடைய உதவியாளர் வெங்கட்ராகவன் இயக்கிய 'முத்தின கத்தரிக்கா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'வெள்ளிமூங்கா' படத்தின் ரீமேக் படமான 'முத்தின கத்தரிக்கா' படத்தில் சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சதீஷ், கிரண், வைபவ், விடிவி கணேஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்தை சுந்தர் சி-குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த படம் மலையாளத்தை போலவே தமிழிலும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.