close
Choose your channels

மயில்சாமி ஆசையை நிறைவேற்றி வைத்த ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

Saturday, July 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த நடிகர் மயில்சாமி ஆசையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிறைவேற்றி வைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’நான் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமியின் ஆசையாக இருந்தது என்றும், அதை சீக்கிரம் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

அந்த வகையில் இன்று ரஜினிகாந்த் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மயில்சாமியின் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றி விட்டார் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ’லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருவதாகவும் அதில் அவர் கலந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.