close
Choose your channels

சூர்யாவின் 'NGK' டீசர் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

Wednesday, March 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல்ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்தது. அதில் இந்த படத்தின் டைட்டில் 'NGK'  என்று குறிப்பிட்டிருந்தாலும் இதற்கு என்ன அர்த்தம் என்று பலவாறாக யூகிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் வந்தால் மட்டுமே இதற்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'NGK'  படத்தின் டீசர் இவ்வருடம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டீசர் வெளியாகும் என்றும் டீசரில் 'NGK' என்றால் என்ன என்பது குறித்து செல்வராகவன் விளக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'NGK'  படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், R.K.விஜயமுருகன் கலை இயக்கமும், G.K.பிரசன்னா படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.