close
Choose your channels

சூர்யாவின் 'சிங்கம் 3' படத்தின் பிரிட்டன் வியாபாரம் குறித்த தகவல்

Saturday, November 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' என்ற 'எஸ் 3' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகக்குறுகிய காலத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீடு இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது என்பது ஏற்கனவே அறிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகை கொடுத்து ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்த அனுபவம் உள்ள இந்நிறுவனம் இந்த படத்தையும் முறையாக புரமோஷன் செய்து பிரிட்டனில் வெற்றி படமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.