close
Choose your channels

'சூர்யா 42' ரிலீஸ் தேதி மற்றும் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! ரசிகர்கள் உற்சாகம்..!

Thursday, April 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் என்பது தெரிந்தது. இந்த படம் தமிழ் உள்பட 10 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அதுமட்டுமின்றி இந்த படத்தில் அதிக கெட்டப்புகளில் சூர்யா நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் ’சூர்யா 42’ படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ’சூர்யா 42’ படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் ’சூர்யா 42' படத்தின் அட்டகாசமான போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. ’சூர்யா 42 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.