close
Choose your channels

சூர்யா ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இந்த மாதம் சூப்பர் அப்டேட்..!

Thursday, July 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

10 கெட்டப்பில் சூர்யா நடித்துள்ள இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் சூர்யா படமாக இந்த ’கங்குவா’ படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி வர இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் ’கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என்று கூறப்படுவதால் சூர்யா ரசிகர்களுக்கு இந்த மாதம் ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் ’கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடிப்பில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.