close
Choose your channels

'ரோலக்ஸ் சார்' தோற்றத்திற்கு இவர் தான் காரணம்: சூர்யா வெளியிட்ட ரகசியம்!

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் தமிழ் தெலுங்கில் பல வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கடைசி ஐந்து நிமிடங்களில் வரும் காட்சிகளில் நடித்த சூர்யா, ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கலக்கி இருந்தார். குறிப்பாக அவரின் தோற்றம் மிக அபாரமாக இருந்தது என்றும் அவருக்கு மேக்கப் செய்த கலைஞருக்கு பாராட்டுக்கள் என்றும் பல விமர்சகர்கள் குறிப்பிட்டு இருந்தர்கள்.

இந்த நிலையில் தற்போது சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் ரோலக்ஸ் கேரக்டருக்கு மேக்கப் செய்தது யார் என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். ஷெரினா டிக்சிரியா என்ற மேக்கப் கலைஞர் தான் தன்னுடைய ரோலக்ஸ் தோற்றத்திற்கு காரணம் என்று கூறிய சூர்யா, தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சூர்யா பகிர்ந்துள்ளார்.

மேக்கப் மற்றும் சிகை அலங்கார நிபுணராக ஷெரினா, ஏற்கனவே தமிழ் உள்பட பல இந்திய திரைப்படங்களுக்கு பணிபுரிந்துள்ளார். மணிரத்தினம் இயக்கிய ’காற்று வெளியிடை’ ’செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் இவர் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.