close
Choose your channels

விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த தமிழ் நடிகை: வீடியோ வைரல்

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன் ’தும்பா’ மற்றும் ’அன்பிற்கினியாள்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் பயிற்சியாளர் உடன் விமானத்தில் இருந்து விண்ணில் இருந்து குதித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சாகசம் செய்யும் திரில்லாக இருக்கும் இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தைரியமாக விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த கீர்த்தி பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.